நெருக்கடி முற்றுவதால் ரூ.6,868 கோடி கோடி திருப்பி செலுத்த விஜய்மல்லையா சம்மதம்

நெருக்கடி முற்றுவதால் ரூ.6,868 கோடி கோடி திருப்பி செலுத்த விஜய்மல்லையா சம்மதம்
vijay mallaiya
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு பிரிட்டனுக்கு தப்பி சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ரூ.4000 கோடியை திருப்பித்தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் வங்கிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி மட்டுமின்றி ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது ரூ.6,868 கோடியை திருப்பி செலுத்த அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

என் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவர்களை இந்த வழக்கில் இணைக்க முடியாது என்று கூறியுள்ள விஜய் மல்லையா என்னுடைய கடன்களை பேசி தீர்க்க நான் தயாராகவே இருப்பதாகவும் பாஸ்போர்ட் முடக்கம், பிணையில் வர முடியாத பிடி ஆணை பிறப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும் சூழ்நிலையில் தன்னால் பேச முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்..

இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply