ரூ.9000 கோடி மோசடி செய்தவருக்கு 3வது திருமணமா? விஜய் மல்லையா மீது சமூக வலைத்தள பயனாளிகள் கொந்தளிப்பு
இந்திய வங்கிகளில் சுமார் 9ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா விரைவில் 3வது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் சமூக வலைத்தள பயனாளிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
ஒருசில ஆயிரங்கள் கடன் பெற்ற விவசாயிகள் தாக்கப்பட்டு கொண்டும் தற்கொலை செய்து கொண்டும் இருக்கும் நிலையில் பல கோடிகள் கடன் பெற்றவர்களை வெளிநாட்டில் உல்லாசமாக உலாவ விட்டுள்ள அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
ஏற்கனனவே விஜய் மல்லையா சமீரா தைப்ஜீ என்பவரை 1986 ஆம் ஆண்டும் பின்னர் 1993 ஆம் ஆண்டு ரேகா மல்லையா என்பவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது லண்டனில் தனது காதலியான இந்த பிங்கி லல்வானி என்ற பெண்ணை 3வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிங்கி லல்வானி, விஜய் மல்லையாவுடன் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.