அழைப்பு இல்லாமல் எந்த விழாவுக்கும் செல்ல மாட்டேன். விஜய் மல்லையா

அழைப்பு இல்லாமல் எந்த விழாவுக்கும் செல்ல மாட்டேன். விஜய் மல்லையா
vijay mallaiah
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய தூதரை வெறுப்பேற்றுவதற்காக லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தனது மகளுடன் விஜய் மல்லையா கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த விழாவுக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்றும், டுவிட்டரில் வெளியிட்டிருந்த அழைப்பை பார்த்து விஜய் மல்லையா கலந்து கொண்டிருக்கலாம் என்றும் புத்தக வெளியீட்டாளர்கள் விளக்கம் அளித்தனர்.

அதேபோல் இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து கூறியபோது, ‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விஜய் மல்லையாவை அழைக்கவில்லை. அவராக வந்துள்ளார். சமூகவியலாளர் சுஹெல் சேத் எழுதிய புத்தகத்தை இங்கிலாந்து அமைச்சர் ஜோ ஜான்சன் வெளியிட்ட நிகழ்ச்சியில் அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் மல்லையா பெயர் இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக கூறியுள்ளனர்’ என்று தெரிவித்தது.

ஆனால் இதற்கு விஜய் மல்லையா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘என் வாழ்நாளில் அழைக்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. இனிமேலும் அழைக்காமல் செல்ல மாட்டேன். நான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல. புத்தகத்தை எழுதியவர் என் நண்பர். என் மகளுடன் நிகழ்ச்சிக்கு சென்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அதன்பிறகுதான் ஊடகங்கள் ஊகங்களின் அடிப்படையில் தலைப்பு செய்திகளாக வெளியிட்டன’’

Leave a Reply