விஜய்மல்லையா போலவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனை கட்டவில்லை. அட்டர்னி ஜெனரல் தகவல்

விஜய்மல்லையா போலவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனை கட்டவில்லை. அட்டர்னி ஜெனரல் அதிர்ச்சி தகவல்
Mallya-Roahtgi2
பாரத ஸ்டேட் வங்கி உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய வங்கிகளிலும் ரூ.9000 கோடி வரை கடன்வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்படும் விஜய்மல்லையா, தான் இழந்த பெயரையும் புகழையும் மீண்டும் பெற அவர் தானாக முன்வந்து கடனை கட்ட முயற்சி செய்ய வேண்டும் என இந்திய அட்டர்னி ஜெனரல் முகூல் ரோஹத்கி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மல்லையா போலவே இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை திருப்பித்தரவில்லை என்றும் அரசு விஜய் மல்லையா பின்னால் மட்டுமே செல்கிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் முகூல் ரோஹத்கி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘விஜய்மல்லையாவுக்கு டஹ்ற்போது எவ்வித சட்ட ரீதியிலான தடையும் இல்லை என்றும், அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து தன்னுடைய கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அவருக்கு மீண்டும் பழைய புகழ் கிடைக்கும் என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசின் கருத்தை விஜய் மல்லையா அர்த்தமாக்கி வருவது அவருக்குத்தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply