திருடன் மல்லையாவே வெளியே போ! லண்டன் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ஆவேசம்

திருடன் மல்லையாவே வெளியே போ! லண்டன் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ஆவேசம்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிகளுக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி தராமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண விஜய்மல்லையா மைதானத்திற்கு வருகை தந்து இந்திய அரசை வெறுப்பேற்றி வருகிறார்.

நேற்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதிய போட்டியை நேரில் பார்க்க மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள்ல் ‘திருட்டுப்பயலே விஜய்மல்லையாவே வெளியே போ’ என கரகோஷம் எழுப்பியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply