விஜய்-முருகதாஸ் தடைக்கு பதிலடி கொடுக்க தமிழ்த்திரையுலகம் அதிரடி முடிவு.

vijay and murugadossதெலுங்கு திரையுலகம் விஜய் மற்றும் முருகதாஸுக்கு தடை விதித்துள்ளதால் தமிழ் திரையுலகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் மாஸ் நடிகராக உள்ள ஒருவருக்கும், முன்னணி இயக்குனருக்கும் விதிக்கப்பட்ட இந்த தடை காரணமாக கோலிவுட் படவுலகம் பரபரப்பு அடைந்துள்ளது. இதை இப்படியே விட்டால் இதுபோன்று பல தடைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என முடிவு செய்த தமிழ் திரைப்படங்களின் பல்வேறு சங்கங்கள் இதுகுறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இருவருக்கும் விதிக்கப்பட்ட தடையை விலக்காவிட்டால் தெலுங்கு படங்களுக்கு தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுக்க ஒருசிலர் யோசனை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இப்படியே பெரிதாக்க வேண்டாம், தெலுங்கு பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தடையை விலக்க நடவடிக்கை எடுக்கலாம் என சில சீனியர் பொறுப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது தமிழின் அனைத்து படங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை தந்துகொண்டிருப்பதால், இந்த விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்க வேண்டாம் என ஒருசிலர் நினைக்கின்றனர். ஆனால் படமே எடுக்காமல் பதவியில் இருக்கும் சிலர் மட்டும் இந்த விஷயத்தை பெரிதாக்கி குளிர்காய நினைத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் தடை விதிக்கப்பட்ட விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருமே இந்த தடையை பற்றி கண்டுகொள்ளாமல் அவர்களுடைய அடுத்தடுத்த படவேலையில் மும்முரமாக உள்ளனர்.

Leave a Reply