மீண்டும் பழைய சென்னையை கொண்டு வருவோம். நடிகை எமிஜாக்சன்
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும் ‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவருமான எமிஜாக்சன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘வெள்ளத்தால் வாடும் சென்னை மக்களுக்கு உதவ முடியாத நிலைக்கு வருந்துவதாகவும், ஆனால் சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர தான் கண்டிப்பாக உதவி செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கோவாவில் இருப்பதாகவும் சென்னை திரும்பியதும் கண்டிப்பாக சென்னை மக்களுக்கு ‘தெறி’ படக்குழுவினர் உதவி செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையின் நிவாரண பணிகள் முடிவடைந்ததும் சென்னையை மறுகட்டமைக்க வேண்டும் என்றும் அதற்கான நிதியை விஜய் உள்பட ‘தெறி’ படக்குழுவினர் தர திட்டமிட்டுள்ளதாக கூறிய எமி ஜாக்சன், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சி செய்வோம்’ என்று கூறியுள்ளார்