பாகுபலி’யை பழிவாங்க விஜய் தரப்பு அதிரடி திட்டமா?

பாகுபலி’யை பழிவாங்க விஜய் தரப்பு அதிரடி திட்டமா?

vijayபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ மற்றும் விஜய் நடித்த ‘கத்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே சென்னையில் மிக அதிகமாக வசூல் செய்த படங்கள் என்ற சாதனையை செய்துள்ளது. இந்த இரண்டு படங்களும் முறையே  ரூ.9.67 கோடியும், ரூ.7.83 கோடியும் சென்னையில் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் சாதனையை எந்த படமும் கடந்த சில மாதங்களாக முறியடிக்காத நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’ திரைப்படம் கத்தி சாதனையை உடைத்தெறிந்து, ‘ஐ’ சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது.

‘பாகுபலி’ திரைப்படம் சென்னையில் 50 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை இந்த படம் சென்னையில்  ரூ.8.10 கோடி வசூல் செய்து கத்தியின் சாதனையை முறியடித்துவிட்டது. அனேகமாக இந்த வார இறுதிக்குள் ‘ஐ’ சாதனையையும் முறியடித்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலயில் விஜய் தரப்பு அடுத்த வெளிவரவுள்ள ‘புலி’ படத்தை சென்னையில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்து பாகுபலி’ சாதனையை முறியடிக்க வேண்டும் என திட்டம் போட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய தியேட்டர்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பெரும்பாலான திரையரங்குகளில் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘பாகுபலி’யின் சாதனையை ‘புலி’ முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply