குத்தாட்ட நடிகையின் மகளுக்கு தந்தையானார் விஜய்?
விஜய் நடித்து வரும் ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 59’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார், மொட்டை ராஜேந்திரன், பிரபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கின்றார் என்பது ஏற்கனவே வெளிவந்த செய்திதான். விஜய்யின் மகளாக நடிக்க பல குழந்தைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில் நடிகை மீனாவின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்க்கு மகளாக அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை மீனா, மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, விஜய் நடித்த ‘ஷாஜஹான்’ படத்தில் “சரக்கு வச்சிருக்கேன், இறக்கி வச்சிருக்கேன்’ என்ற குத்தாட்ட பாடலில் நடனம் ஆடியுள்ளார். தன்னுடன் குத்தாட்டம் ஆடிய நடிகையின் மகளுக்கு தற்போது விஜய் அப்பாவாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.