விஜய் சேதுபதியின் புதிய படத்தின் டைட்டில்-பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

விஜய் சேதுபதி நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் என்ற வெற்றி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன்

இந்த படத்திற்கு மும்பைகார் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அட்டகாசமாக விஜய் சேதுபதி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Leave a Reply