சூர்யாவுக்கு சிறப்பான ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி!

டுவிட்டரில் பரபரப்பு

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டபோது தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்து நடிகர் சூர்யா நேற்று அன்பான அதே நேரத்தில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்ற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதாகவும் இந்த கருத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் சூர்யா நேற்று அறிக்கை விட்டது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் சூர்யாவின் இந்த கருத்துக்கு விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’சிறப்பு’ என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் கருத்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply