என்னை கேட்காமல் அஜித்தை ஏன் சந்தித்தாய்? விஜய்சேதுபதியை மிரட்டிய பெண்

என்னை கேட்காமல் அஜித்தை ஏன் சந்தித்தாய்? விஜய்சேதுபதியை மிரட்டிய பெண்

தல அஜித்தை சந்திக்க அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் விரும்புவதுண்டு. ஆனால் அவர் விரும்பி அழைத்தால் மட்டுமே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்

இப்படி ஒரு வாய்ப்பு சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு கிடைத்தது. சமீபத்தில் சென்னையில் ‘விவேகம்’ படப்பிடிப்பில் இருந்த அஜித், விஜய்சேதுபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு தனது உதவியாளரிடம் கூறினாராம். அஜித்திடம் இருந்து வந்த அழைப்பு வந்த அடுத்த நிமிடம் இன்ப அதிர்ச்சி அடைந்த விஜய்சேதுபதி உடனே ‘விவேகம்’ படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்று அவரை சந்தித்தார்

இந்த சந்திப்பின்போது ‘விஜய்சேதுபதி சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாகவும், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருப்பதாகவும் அஜித் விஜய்சேதுபதியை பாராட்டியதோடு, தொடர்ந்து இந்த மூன்றையும் பின்பற்றும்படி அறிவுரை கூறினாராம்

இந்த சந்திப்பு குறித்து கேள்விப்பட்ட விஜய்சேதுபதியின் மனைவி அஜித்தை சந்திக்க செல்லும்போது என்னையும் ஏன் அழைத்து கொண்டு செல்லவில்லை என்று அன்புடன் கணவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

Leave a Reply