‘விஜய் 60’-ல் விஜய் பாடும் ‘நெருப்புடா’ டைப் பாடல்
இளையதளபதி விஜய் நடிக்கும் அனைத்து படங்களிலும் அவரது குரலில் ஒரு பாடல் இடம்பெறுவது என்பது கிட்டத்தட்ட ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான ‘தெறி’ உள்பட பல படங்களில் விஜய் ஒரு பாடலை பாடி வருகிறார்.
இருப்பினும் இதுவரை விஜய் பாடிய அனைத்து பாடல்களுமே ரொமான்ஸ் மற்றும் டூயட் பாடலாகவே இருந்துள்ளது. எனவே விஜய்யை முதன்முதலில் வித்தியாசமான முறையில் பாட வைக்க ‘விஜய் 60’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நெருப்புடா’ பாடல் டைப்பில் விஜய்யை இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் பாட வைக்கவுள்ளதாகவும், இந்த பாடல் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் சந்தோஷ் நாராயணன் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.