நான் தியாகி என்று சொல்ல மாட்டேன். ஆனால் துரோகி அல்ல. கத்தி விழாவில் விஜய்

kaththiஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக விளங்கும் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியாக நடந்தது. கத்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா  வாங்கியிருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து, போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்த தமிழ் அமைப்புகள் நேற்று அமைதியாகிவிட்டனர். மேலும் செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பலத்த பாதுகாப்பும் விழா அமைதியாக நடக்க ஒரு காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்த விழாவில் விஜய் கொஞ்சம் ஆவேசமாக பேசி, தனக்கு பிரச்சனை கொடுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

உண்மைக்கு விளக்கம் சொல்லலாம். அது தவறில்லை. ஆனால் வதந்திகளுக்கெல்லாம் விளக்கம் சொன்னால் அது உண்மையாகிவிடும். என் படத்தை பற்றி நான் எப்பொழுதுமே அதிகம் பேசுவதில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி கொஞ்சம் பேசித்தான் ஆக வேண்டும். இந்த படம் எனக்கும் முருகதாஸுக்கும் ஒரு முக்கியமான படம்.

என்னை நான் தியாகி என்று எப்பொழுதுமே சொன்னதில்லை. ஆனால் கண்டிப்பாக நான் துரோகி இல்லை. தமிழ் மக்களுக்கு என்றுமே துரோகம் செய்ய மாட்டேன் என தமிழ் அமைப்பாளர்களுக்கு மறைமுக பதிலடி கொடுத்தார்.

இந்த விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், எங்களுடைய ஒவ்வொரு செல்லிலும் தமிழ் உணர்வு இருக்கின்றது. நானும் தமிழன் தான். விஜய்யும் நானும் என்றைக்குமே பணத்தின் பின்னால் போக மாட்டோம். எங்கள் ஆதரவு என்றைக்குமே தமிழ் மக்களுக்கு உண்டு. தமிழ் உணர்வுதான் எங்களுக்கு முக்கியம், பணம் அல்ல..

நான் மருத்துவமனையில் உடல்நலமின்றி இருந்தபோது என் அருகில் ஒருநாள் முழுவதும் இருந்து என்னை அன்புடன் கவனித்துக்கொண்டவர் விஜய். அவரை போல ஒரு மனிதநேயமுள்ள மனிதரை பார்க்க முடியாது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1qi3WFL” standard=”http://www.youtube.com/v/DbooDjJh-wo?fs=1″ vars=”ytid=DbooDjJh-wo&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5867″ /]

Leave a Reply