சென்சார் போர்டு சான்றிதழ் கொடுத்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என சமீபத்தில் மதுரை ஐகோர்ட் கத்திக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததால் ‘கத்தி’ படக்குழுவினர்களும், விஜய் ரசிகர்களும் உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர். அவர்கள் கத்தி திரைபடத்தை மாபெரும் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவில் விஜய் கத்தி திரைப்படம் அதிக தியேட்டரில் திரையிட்டு தமிழ்ப்படங்களின் நம்பர் ஒன் கலெக்ஷன் படம் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்று விஜய் உள்பட கத்தி படக்குழுவினர் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் குறிப்பாக மாநகராட்சி நகரங்களீல் கத்தி திரைப்படம் அதிக தியேட்டர்களில் வெளியான சாதனையை ஏற்படுத்தவேண்டும் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் பலனாக கோவையில் இதுவரை அதிகபட்சமாக 75 தியேட்டர்களில் வெளியாகி சாதனை புரிந்த ‘வீரம்’ திரைப்படத்தின் சாதனையை ‘கத்தி’ முறியடித்ததுள்ளது. கத்தி திரைப்படம் கோவையில் 80 தியேட்டர்களில் புக் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களிலும் கத்தி சாதனை படைக்க உள்ளது.
கத்தி படத்தின் வெற்றியை வைத்துதான் விஜய் அடுத்தகட்டமாக தனது அரசியல் வாழ்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கத்தியை மாபெரும் வெற்றிப்படமாக்கியே தீருவேன் என்று விஜய், அவரே களத்தில் இறங்கி தனது ரசிகர்களுடன் இரவு பகலாக ஆலோசனை செய்து வருகிறார்.