ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் கத்தி படத்தை ஆரம்பிக்கும்போது சூர்யாவைத்தான் அணுகினாராம். முதலில் முருகதாஸிடம் சம்மதம் தெரிவித்த சூர்யா, பின்னர் தயாரிப்பாளர் மற்றும் அவரது நிறுவனத்தை பற்றி விசாரித்த போது, அந்த நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதை அறிந்ததும் பின்வாங்கிவிட்டார்.
அதன்பின்னர்தான் முருகதாஸும், லைகா நிறுவனமும் விஜய்யை அணுகியுள்ளது. விஜய்யும் முதலில் தயாரிப்பு நிறுவனம் குறித்து யோசித்த நேரத்தில், விஜய் மனைவி சங்கீதா, இலங்கை தமிழ்ப்பெண் என்பதால் அவருடைய பரிந்துரையின் பேரில்தான் விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் பிரச்சனை தமிழ் அமைப்புகளால் தீவிரவானபோது, இவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று விஜய் மனைவி சங்கீதா எதிர்பார்க்கவில்லை என்றும், தன்னால்தான் விஜய்க்கு இவ்வளவு பெரிய பிரச்சனையாகிவிட்டதால் அந்த பிரச்சனையை தானே தலையிட்டு முடிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் பிறந்து வளர்ந்த விஜய் மனைவி சங்கீதா, அங்குள்ள தனது உறவினர்கள் மூலம் லைகா நிறுவனத்துடன் கத்தி படத்தின் உரிமையை தங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அவருடைய முயற்சியால் கண்டிப்பாக கத்தி படம் கைமாறும் என்றும் உறுதியாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இருந்து இந்த தகவல் பொய்யானது என்று மறுக்கப்பட்டுள்ளது. கத்தி பிரச்சனைக்கும் சங்கீதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.