ஜப்திக்கு ஆளான தயாரிப்பாளரை காப்பாற்றுவாரா விஜய்?
கோலிவுட்டில் பிரமாண்ட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் சமீபத்தில் கடன் காரணமாக அவருடைய சொத்துக்கள் ஜப்தி செய்யப்படுவதாக தகவல்கள் வந்தன.
பல பெரிய நடிகர்களின் ஹிட் படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவிச்சந்திரனை காப்பாற்ற எந்த பெரிய நடிகராவது முன்வருவார்களா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் அவருக்காக கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலாயுதம்’ படத்தை தயாரித்தபோதே நாம் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம் என்று விஜய் வாக்கு கொடுத்ததாகவும், அந்த வாக்குறுதையை காப்பாற்றும் வகையில் விரைவில் அவருக்கு கால்ஷீட் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.