2014-15 நிதியாண்டில் விஜயா வங்கி 8,703 கல்வித் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு தங்களது மேற்படிப்பை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் தொடர கல்விக் கடனாக ரூ. 257 கோடி வழங்கியுள்ளது. வங்கியின் வருடாந்திர கல்வி கடன் வளர்ச்சி 18.75% ஆகும்.
இந்திய அரசின் குறிக்கோள்களுக்காக IBA-இன் பரிந்துரைகளுடன் பின்வரும் கல்விக் கடன் வசதிகளை வங்கியில் பெறலாம்.
UGC / AWN / AICTE போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடர நுழைவுத் தேர்வு/ தகுதி முறையிலான தெரிவு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இந்திய மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை (இந்திய படிப்பு), ரூ. 20 லட்சம் வரை (வெளிநாட்டு படிப்பு) கல்விக் கடன் வழங்கப்படும்.
ரூ. 7.50 லட்சம் வரை பிணைகாப்பு தேவையில்லை. கல்விக் காலம் முடித்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்.
வங்கியின் பல்வேறு கல்விக் கடன்கள்:
தொழிற்கல்வி, பயிற்சிக் கல்விக்கான கடன், IIM, IIT, IIS-இல் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புக் கல்விக் கடன் ISB ஹைதராபாத், மொஹாலியில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணைக்காப்பில்லாதக் கல்விக் கடன் போன்ற பல்வேறு கல்விக் கடன்கள் விஜயா வங்கி வழங்கி வருகிறது.