விஜயதாரிணி அதிரடி பதவிநீக்கம். ராகுல்காந்தி நடவடிக்கையால் இளங்கோவன் தரப்பு உற்சாகம்.

விஜயதாரிணி அதிரடி பதவிநீக்கம். ராகுல்காந்தி நடவடிக்கையால் இளங்கோவன் தரப்பு உற்சாகம்.
evks
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரிணிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இதன்பின்னர் விஜயதரணியின் ஆதரவாளர்கள், இளங்கோவன் மீது காவல்துறை புகார் அளித்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜயதாரிணியின் பதவியை பறிக்கவேண்டும் என இளங்கோவன் ஆதரவாளர்கள் டெல்லி சென்று ராகுல்காந்தியிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது அதிரடியாக விஜயதாரிணி மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

விஜயதாரிணிக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவரும் மறைந்த மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் பேத்தியுமான ஜான்சி ராணி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார்.  

விஜயதாரிணியின் பதவிப்பறிப்பு அவருக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே அவரது ஆதரவாளர்கள் கருதுவதாகவும் அதே நேரத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply