முதல்வர் படம் அப்புறப்படுத்தப்பட்ட வழக்கு. விஜயகாந்த் கைதா? நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் படம் அப்புறப்படுத்தப்பட்ட வழக்கு. விஜயகாந்த் கைதா? நீதிமன்றம் உத்தரவு

vijayakanthதஞ்சாவூரில் முதல்வர் ஜெயலலிதா படத்தை அப்புறப்படுத்த தேமுதிக தொண்டர்களுக்கு உத்தரவிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 25-ஆம் தேதி வரை விஜயகாந்தை கைது செய்யத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் தஞ்சாவூரில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது அங்கிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் அப்புறப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் மீது தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கசாமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தன்னை கைது செய்யக் கூடாது என சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் விஜயகாந்த் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 5-ஆம் தேதி வரை விஜயகாந்தை கைது செய்ய ஏற்கெனவே தடை விதித்திருந்தது.  இந்நிலையில், இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு பதில் அளிக்க அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதல் நீதிபதி, வரும் ஜனவரி 25-ஆம் தேதி வரை விஜயகாந்தை கைது செய்யத் தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

Leave a Reply