தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடன்பிறந்த சகோதரர் பால்ராஜ் தனது மனைவியுடன் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று ஜெயலலிதா பேசிய பிரச்சார கூட்டத்தில் பேசியபோது விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜும், அவர் மனைவி வேங்கடலட்சுமியும், ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். அதிமுக உறுப்பினர் கார்டு வாங்கிய பால்ராஜ், அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடப்போவதாக கூறினார்.
விஜயகாந்தின் அப்பாவுக்கு இரு மனைவிகள். அவர்களில் இரண்டாவது மனைவியின் மகன் பால்ராஜ். இவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல வருடங்களாக விஜயகாந்த் செய்து வந்தார். ஆனால் இவருக்கும் பிரேமலதாவுக்கும் சமீபத்தில் மனக்கசப்புகள் தோன்றவே, விஜயகாந்திடம் இருந்து சிறிது காலமாக ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பால்ராஜ், தான் அதிமுகவில் குடும்பத்துடன் இணைய விரும்புவதாக கூறவே, அவர் நேற்று முதல்வர் ஜெயலலிதா கூட்டத்திற்கு அழைத்து வந்து ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி அதிமுக உறுப்பினராக சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் தம்பியே அதிமுக பக்கம் வந்துவிட்டார் என்று அ.தி.மு.க.வினர் தற்போது பிரசாரம் செய்து வருகின்றனர். தம்பியின் இந்த அதிரடி செயலால் விஜய்காந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.