பாரதிய ஜனதா கூட்டணியில் விஜயகாந்த் உறுதி. தமிழருவி மணியன்

 

விஜயகாந்தின் தேமுதிக கட்சி இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து கொண்டே இருக்கிறது. திமுக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தேமுதிக இழுத்து போடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் தேமுதிக கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் நடந்து வரும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், மிக விரைவில் தொகுதி உடன்பாடு செய்து கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

தேமுதிக, பா.ம.க மற்றும் மதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி அமைக்கும் கூட்டணி வலிமையானது என்றும் அதிமுகவுக்கு மாற்றாக இந்த கூட்டணி இருக்கும் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த பலமான கூட்டணி மூலம் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் இருந்து பெருவாரியான தொகுதிகளை ஜெயித்துக்கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply