சிங்கப்பூருக்கு விஜயகாந்த் ரகசிய பயணம். சிகிச்சைக்காக செல்கிறாரா?

Vijayakanth-and-Premalathaதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை திடீரென பாதிப்பு அடைந்ததால் அவர் நேற்று சிங்கப்பூருக்கு தனது மனைவியுடன் ரகசிய பயணம் செய்துள்ளார். நேற்றிரவு 1.40 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் கிளம்பி சென்றார். அவர் சிங்கப்பூர் செல்வது அவரது கட்சியினர்களுக்கே தெரியவில்லை. இந்த பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

விஜயகாந்த கடந்த மாதம் சிங்கப்பூரில் கண் சிகிச்சை செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. பின்னர் அவர் தனது மகனின் திரைப்படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியாக மாவட்டந்தோறும் கட்சியினர்களை சந்திக்கும் திட்டத்தையும் அவர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென சிங்கப்பூர் கிளம்பி சென்றதால் தேமுதிக கட்சியினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எப்பொழுது நாடு திரும்புவார் என்பது குறித்து இன்னும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே தெரியவில்லை.

Leave a Reply