விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள். மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி உடன்பாடு
தனித்து போட்டி என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாரபூர்வமாக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். அதுமட்டுமின்றி மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் தற்போது சுறுசுறுப்பாகியுள்ளது.
தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்பதை வைகோ உள்பட கூட்டணியின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக 124 இடங்களிலும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இரண்டாவது முறையாக பழம் வரும் என காத்திருந்த திமுக தலைவருக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என கூறப்படுகிறது.