கேப்டன் டிவியில் விஜயகாந்த் பிரச்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?

கேப்டன் டிவியில் விஜயகாந்த் பிரச்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?

vijayakanthதேர்தலின்போது பிரச்சாரத்திற்கு உதவும் என்பதற்காகவே விஜயகாந்த் ஆரம்பித்த கேப்டன் டிவி, தற்போது அவருடைய பிரச்சாரத்தையே நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்திவிட்டது. இது குறித்து விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்கள் இதோ…

விஜயகாந்த் பேசிக்கொண்டிருக்கும்போது தொண்டர்கள் விசில் அடித்தாலோ அல்லது கத்தினாலோ விஜயகாந்த் டென்ஷன் ஆகி, நாக்கை துறுத்துவது, அடிப்பது போல் கையை ஓங்குவது என்று மேடை நாகரீகத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்கிறார். அதுமட்டுமின்றி மைக்கை பிடித்து பேசும்போது திடீரென பிரியாணி செய்வது எப்படி ,தன்னுடைய மகன்கள் வளர்க்கும் நாய்கள் என சம்பந்தம் இல்லாமல் பேசுவதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரேமலாதாவிடம் புகார் கூறியுள்ளனர்.

ஏற்கனவே அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு 5 முதல் 10 சீட்டுக்கள்தான் கிடைக்கும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்த் இப்படி பேசினால் அதுவும் கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணிய பிரேமலதா உடனடியாக விஜயகாந்த் பேச்சை நேரடி ஒளிப்பரப்பை நிறுத்த சொல்லிவிட்டாராம். தற்போது அவருடைய பேச்சு எடிட் செய்துதான் கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஆனால் விஜயகாந்த் உளறும் பேச்சுக்களை கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் வீடியோ எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் போட்டு மீம்ஸ்களை உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply