இன்று தேமுதிக கட்சி எம்.எல்.ஏக்கள் சிலருடன் பாரத பிரதமரை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக நிலவரம் குறித்து பேசுவதற்காக பிரதமரை சந்தித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
இன்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக இதுவரை பிரதமரை முதல் அமைச்சரோ அல்லது திமுக தலைவரோ சந்திக்கவில்லை என்றும் அதனால்தான் நான் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சந்தித்து மீனவர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் பேசியதாக தெரிவித்தார்.
தமிழகத்தை திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்துவிட்டன என்றும் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பாராட்டத்தக்க சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
கூட்டணி குறித்து பிரதமரிடம் என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1ey4d1j” standard=”http://www.youtube.com/v/K-vo7RzayJk?fs=1″ vars=”ytid=K-vo7RzayJk&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3553″ /]