முதல்வர் படத்தை அகற்ற உத்தரவிட்ட விஜயகாந்த் மீது போலீஸார் வழக்கு

முதல்வர் படத்தை அகற்ற உத்தரவிட்ட விஜயகாந்த் மீது போலீஸார் வழக்கு
vijayakanth
பத்திரிகையாளர்கள் முன் தேமுதிக தலைவர் அநாகரீகமாக நடந்து கொண்ட பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் நேற்று தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் முதல்வரின் படத்தை அகற்ற விஜயகாந்த் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க. சார்பில் தஞ்சையில் ரயிலடி தபால்நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு எதிரே இருந்த பேருந்து நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் டென்ஷன் ஆன விஜயகாந்த் அந்த படத்தை அகற்றை தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

உடனே பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையின் மேல் ஏறிய தே.மு.தி.க தொண்டர் ஒருவர், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை  உடைத்து எரிந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அதிமுகவினர், தஞ்சை அ.தி.மு.க எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்பட 50 தே.மு.தி.க.வினர் மீது தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, முதல்வர் படம் குறித்து தரக்குறைவாக பேசியது, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உள்பட 50 தே.மு.தி.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அதிமுகவினர் பதில் நடவடிக்கையாக அங்கிருந்த விஜயகாந்த் பேனர்களை கிழித்தெறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply