ஆர்.கே.நகருக்கு 25 அமைச்சர்கள், கடலூருக்கு 5 அமைச்சர்களா? விஜயகாந்த் கேள்வி
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘ஆர்.கே நகர் தேர்தலுக்காக 25 அமைச்சர்களை அனுப்பிய முதல்வர் ஜெயலலிதா, கடலூருக்கு 5 அமைச்சர்களை மட்டும் அனுப்பி இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்
நேற்று கோவை வந்த விஜயகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “சென்னை ஆர்.கே நகர் தொகுதி முதலமைச்சரின் தொகுதி என்பதினால் அங்கு நடைபெற்ற இடை தேர்தலுக்கான பணியில் 25 அமைச்சர்கள் ஈடுபட்டனர் என்றும் ஆனால் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வெறும் 5 அமைச்சர்கள் மட்டுமே சென்றிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்களை அனுப்பியிருந்தால் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் சகிப்பு தன்மை குறைந்து வருவது குறித்து கருத்து கூறிய விஜய்காந்த், சகிப்புத்தன்மை குறைந்து வருவது உண்மை தான் என்றும் முக்கியமாக அரசு அதிகாரிகளுக்கு சகிப்பு தன்மை மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary: Vijayakanth question to CM Jayalalitha