அப்துல்கலாம் பிறந்த தினத்தை உலக மாணவர் தினமாக கொண்டாட வேண்டும். விஜயகாந்த்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளை உலகம் முழுவதும் மாணவர்கள் தினமாக கொண்டாட உலக நாடுகளை வலியுறுத்த வேண்டி, பிரதமர் நரேந்திரமோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால் உலக யோகா தினத்தை ஐ.நா ஏற்றுக்கொண்டது. அதைப்போல அப்துல்கலாம் அவர்கள் அவர்களின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா ஏற்றுக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு திடலில் இன்று நடைபெற்றபோது இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய விஜயகாந்த், அவரிடம் நேரில் கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்தார்.
அந்த கடிதத்தில், “அப்துல் கலாமின் திடீர் மறைவு உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அணு விஞ்ஞானியாகவும், குடியரசுத் தலைவராகவும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் அப்துல்கலாம் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். உலகம் முழுவதுமுள்ள மாணவர் சமுதாயத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும் அப்துல் கலாமிற்கு விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். இளைய சமுதாயம் அவரது பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என்று விரும்புவதாகவும், அதன்படி கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் நாளை தேசிய மாணவர் தினமாக கொண்டாடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், பிரதமரை விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.