விஜயகாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த திமுக-பாஜக
இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி என தெளிவாக கூறாமல் தானும் குழம்பி தன்னை நம்பியவர்களையும் குழப்பி கொண்டிருந்த விஜயகாந்துக்கு தற்போது திமுக மற்றும் பாஜகவினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே விஜயகாந்த் ஆடிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணியுடன்கூட்டு இல்லை என்பதை விஜயகாந்த் முதலிலேயே முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. திமுக அல்லது பாஜக இந்த இரண்டில் எந்த கூட்டணி அதிக பணமும், தொகுதிகளும் தருகிறதோ, அந்த கூட்டணியில் சேரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் முடிவு சொல்வதை கடைசி வரை இழுத்து சென்று பேரத்தை அதிகரிக்கலாம் என்ற கணக்கில் விஜயகாந்த் முடிவை சொல்வதில் காலம் தாழ்த்தினார்.
இந்நிலையில் விஜய்காந்த் கூட்டணி தேவையில்லை என்ற மனநிலையில் திமுகவும், பாஜகவும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாகவும், திமுக, மக்கள் நலக்கூட்டணியை உடைக்க காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விஜயகாந்த் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நேற்றுதான் விஜயகாந்துக்கு அரசியல் பண்ண தெரியவில்லை என ராதிகா கூறிய நிலையில் தற்போது அது உண்மை என தெரியவந்துள்ளது.