கொடநாடு செல்ல முடிந்த முதல்வருக்கு அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையா? விஜயகாந்த்

கொடநாடு செல்ல முடிந்த முதல்வருக்கு அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையா? விஜயகாந்த்
dmdk
முன்னாள் ஜனாதிபதியும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமாகிய அப்துல்கலாம் அவர்களின் 84வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அப்துல் கலாமின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் அவர், அப்துல்கலாமின் சிறப்புகளை விளக்கும் வகையில், டி.ஆர்.டி.ஓ. பவனில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். தமிழகத்திலும் அப்துல்கலாமின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தமிழக அரசும் ஏராளமான தன்னார்வ அமைப்புகளும், கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ஆகியோர் ஏராளமான தொண்டர்களுடன் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அங்கு கூடி இருந்த மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி உபகரண பொருட்களை விஜயகாந்த் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் ”கலாமின் பிறந்த நாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது. எழுச்சி நாளாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வராமல் கொடநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்று விட்டார். கொடநாடு செல்ல முடிகின்ற முதல்வருக்கு ராமேஸ்வரம் வர முடியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply