குடிதண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா? விஜயகாந்த் ஆவேசம்

குடிதண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா? விஜயகாந்த் ஆவேசம்
[carousel ids=”71467,71468,71469,71470″] தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அரசியல் கட்சிகள் போராட்டங்கள், கட்சி கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை தொடங்கிவிட்டன. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியான தேமுதிக முதல் ஆளாக முக்கிய நகரங்களில் கூட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா என நடத்தி வருகின்றன

இந்நிலையில் நேற்று மதுரை அருகே உள்ள பாசிங்காபுரத்தில் தே.மு.தி.க. சார்பில்,  மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ”மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு தேவையற்ற இடையூறுகளை தருகிறது. மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராத மதுரை மாநகராட்சிக்கு, தமிழக அரசு விருது வழங்கி உள்ளது.

தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை, தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கரண்ட் பாக்ஸ்குள் கையைவிட்டு பாருங்கள் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சொல்கிறார். என்ன லந்தா… யார பாத்து கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விடுன்னு சொல்ற… என் மக்களை பார்த்து நீ என்னையா கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விட சொல்றது. இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா?” என்று ஆவேசமாக பேசினார்.

Leave a Reply