பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவேன். விஜயகாந்த்

பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவேன். விஜயகாந்த்

vijayakanthநடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் தொகையையும் இழந்தார். அவர் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த 103 வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இந்த தேர்தலோடு தேமுதிக அழிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தோல்வியைப் புறந்தள்ளி பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவேன் என்று விஜயகாந்த் நேற்று நடந்த திருமண விழா ஒன்றில் தெரிவித்தார்.

காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விஜயகாந்த் பேசியபோது, “தேர்தல் தோல்விக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். இடைத்தேர்தல் வருகிறது. அதைக் கண்டும் பயப்பட வேண்டாம். நானும் பயப்பட மாட்டேன். ஊடகங்களும், பத்திரிகைகளும்தான் விஜயகாந்த் பயந்துவிட்டார் என்று எழுதுகின்றன. தேர்தலில் தோற்றாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவேன்’ என்று கூறினார்.

இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் சந்திக்கும் முதல் விழா இது. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையவும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்திலும் கூட்டணி ஏற்படுத்தினோம். தோல்வியைக் கண்டு அஞ்சவில்லை. தேர்தலில் கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்றுள்ளனர். முள்பாதையில் பயணிப்பது சற்றுக் கடினம்தான். இறுதி வெற்றி நமக்குத்தான் என்று கூறினார்.

Chennai Today news: Vijayakanth statement about election loss

Leave a Reply