மே மாதம் 19-ம் தேதி விஜயகாந்த் வருந்துவார். தமிழிசை செளந்தரராஜன்

மே மாதம் 19-ம் தேதி விஜயகாந்த் வருந்துவார். தமிழிசை செளந்தரராஜன்
tamilisai
மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மே மாதம் 19ஆம் தேதி தான் ஒரு தவறான முடிவு எடுத்ததற்காக வருந்துவார் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாத்திகத்திற்கு மாற்றாக ஆத்திகம் ஆட்சி செய்ய உறுதி கொண்டுள்ள ஒரே கட்சி பா.ஜ.க. மட்டுமே. இத்தகைய கட்சியுடன் கூட்டு சேராமல் ஆத்திக நம்பிக்கையுள்ள விஜயகாந்த், நாத்திகர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். தான் செய்த தவறை அவர் மே 19-ஆம் தேதி உணர்ந்து அதன் பின்னர் அவர் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்று தமிழிசை செளந்திரராஜன் மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கூறினார்.

மேலும் ‘பஞ்ச பாண்டவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் மக்கள் நலக்கூட்டணியைச் சார்ந்தவர்கள் எந்தவிதித்திலும் நமக்கு போட்டி கிடையாது என்றும் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கு ‘பிரஸ் ஹோமியா வந்திருப்பதாகவும் தமிழிசை கூறியுள்ளார். கேமராவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று கூறும் வைகோவை தமிழக மக்கள் இன்னும் பயமுறுத்த காத்திருக்கிறார்கள்” என்று அவர் விமர்சித்தார்.

Leave a Reply