உள்ளாட்சி தேர்தலுக்கு பின் பாஜகவுடன் தேமுதிக இணைப்பா? அதிர்ச்சி தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் பாஜகவுடன் தேமுதிக இணைப்பா? அதிர்ச்சி தகவல்

vijayakanthநடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் உள்பட தேமுதிகவின் 104 வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்ததால் அதிருப்தியில் உள்ள விஜயகாந்த், வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கட்சியை பாஜகவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் தேமுதிகவின் ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “தே.மு.தி.க.வை வழிநடத்தும் ஆற்றலும், திறமையும் விஜயகாந்திடம் இல்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க.வை பா.ஜ.க.வுடன் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக மக்கள் தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விரைவில் சேலத்தில் நடைபெறும் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டம் ஒன்றில் லட்சக்கணக்கான தே.மு.தி.க.வினர் திமுகவில் இணைவார்கள் என்று சந்திரகுமார் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் புதிய கட்சியை தொடங்கிய நடிகர் சிரஞ்சிவி ஒரு காலகட்டத்திற்கு பின்னர் கட்சியை நடத்த முடியாமல் காங்கிரஸில் தன்னுடைய கட்சியை இணைத்தார். அதேபாணியை விஜயகாந்தும் கடைபிடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply