தெலுங்கானா முதல்வராக நடிகை விஜயசாந்தி தேர்தெடுக்கப்படுவார் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மறைமுகமாக தெரிவித்ததால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகை விஜயசாந்தி அரசியல் முதன்முதலில் பாரதிய ஜனதாவில் கால்வைத்தார். பின்னர் பாரதிய ஜனதாவில் இருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் சந்திர சேகர ராவ் அவர்களின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் இணைந்தார். தெலுங்கானா மாநிலம் அமைய சோனியா காந்தி பெரும் முயற்சி எடுத்ததால், விஜயசாந்தி சில மாதங்களுக்கு முன் காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் ஒரு தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வாரங்கல் தொகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, தெலுங்கானாவில் ஒரு பெண் முதல்வராக வரவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என விஜயசாந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியதால், அவருடைய ஆதரவாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்து பெரிய கரகோஷத்தை எழுப்பினர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்துவரும் லட்சுமணய்யா, இந்த அறிவிப்பு காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் சந்திரசேகர ராவ்வும் ராகுல்காந்தியின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சடசபைக்கும் தேர்தல் நடைபெறுகிரது என்பது குறிப்பிடத்தக்கது.