காங்கிரஸ் -பாஜக என இரு துருவங்களை இணைத்ததே பெரிய வெற்றிதான். விஜயகாந்த்

vijayakanthதமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டெல்லி பயணம் வெற்றிகரமாக அமைந்தது என சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மேகேதாட்டு அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது, திருப்பதி என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்துவது, மீனர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக உள்பட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 27-ம் தேதி சந்தித்து மனு ஒன்றை கொடுத்தர்.

பிரதமரை அடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்துவிட்டு விஜயகாந்த் சமீபத்தில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

டெல்லி பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இரு துருவங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரையும் ஒன்றாக டெல்லிக்கு அழைத்துச் சென்றதே மிகப்பெரிய வெற்றிதான். பிரதமரை பார்த்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை எல்லோரும் வலியுறுத்தி பேசியது மகிழ்ச்சியளித்தது.

எங்கள் கோரிக்கைகளை பிரதமர் மோடி உன்னிப்பாக கேட்டறிந்தார். நிச்சயம் நல்லது செய்வோம் என்று உறுதி அளித்தார். அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி உறுப்பினர்களும் வந்த நிகழ்வை கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது. போக போகத்தான் தெரியும்.

Leave a Reply