நடிகர் விஜய் சமீபத்தில் ‘புலி’ படக்குழுவினர்களுக்கு தனது கையாலே பிரியாணி பரிமாறியதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளிவந்துள்ள நிலையில், இந்த பிரியாணி விருந்து உண்மையில் ‘லிங்கா’ படத்தின் தோல்வியை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி லிங்கா எதிர்ப்பாளர் சிங்காரவேலன், இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும், விஜய் அவர் மீது தோள்மீது கைபோட்டு பாசத்துடன் உறவாடியதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யும் சிங்காரவேலனும் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி இதை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. பிரியாணி விருந்து பரிமாறும் அதே காஸ்ட்யூமில் விஜய் சிங்காரவேலனின் தோளில் கைபோட்டபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிலர், விஜய், லிங்கா எதிர்ப்பாளர்களுக்கு மறைமுக ஆதரவு கொடுப்பதாக டுவிட்டரில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
ரஜினியுடன் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாது என்பதால் விஜய் குறுக்கு வழியில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற முயற்சி செய்வதாகவும் பலர் கமெண்டை பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் முந்தைய படம் ஒன்றில் ரிலீஸின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதே காஸ்ட்யூமில் இருப்பதால் தேவையில்லாத வதந்தியை ஒருசிலர் பரப்பி வருவதாகவும் கூறியுள்ளனர்.