விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. விஜய்யின் அறிமுகப் பாடல் காட்சிக்காக ரூ.5 கோடி செலவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் அந்த பாடல் படமாக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ‘புலி’ படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை நெருங்கிவிட்டதாக ஒரு செய்தி இன்று காலை முதல் பரவி வருகிறது. விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களின் மொத்த வசூலே ரூ.100 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையின் படத்தின் பட்ஜெட்டே ரூ.100 கோடி என்றால் அதற்கு மேல் வசூல் செய்தால்தான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். இது சாத்தியமா என்பதை படம் ரிலீஸான பின்னர்தான் தெரிய வரும்
இந்நிலையில் ‘புலி’ படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்பது படக்குழுவினர்களே கிளப்பி விடும் வதந்தி என்றும் கூறப்படுகிறது. விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய நால்வரின் சம்பளம்தான் இந்த படத்தின் பெரிய செலவுகள் என்றும் அடுத்ததாக கிராபிக்ஸ் செலவுகளை கணக்கில் வைத்தாலும் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தொட வாய்ப்பில்லை என்று கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன. படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன என்பது குறித்து பி.டி.செல்வகுமார் மட்டுமே அறிவார் என்பது குறிப்பிடத்தக்கது.