விஜய்யின் ‘புலி’யை 3Dயிலும் வெளியிட தயாரிப்பாளர் முடிவு
இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த’ திரைப்படம் குழந்தைகள் அனைவரும் விரும்பி பார்க்கும் ஃபேண்டஸி படமாக அமைந்துள்ளதால் இந்த படத்தை ஒருசில திரையரங்குகளில் மட்டும் 3Dயில் வெளியிட இந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக 3D பிரிண்ட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அரசர் காலத்து பிரமாண்ட அரண்மனை செட்டிங்ஸ், அதிர வைக்கும் வாள் சண்டைக்காட்சிகள், சித்திரக்குள்ளர்களின் சாகசக் காட்சிகள் ஆகியவைகளை 3Dயில் பார்த்தால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதே தயாரிப்பாளரின் எண்ணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ‘புலி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. ரஜினி, ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி படங்களுக்கு அடுத்து இந்திய அளவில் மூன்று முக்கிய மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் படம் ‘புலி’ என்பது குறிப்பிடத்தக்கது.