மலையாளியாக மாறிவிட்டாரா விஜய்?
விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தில் விஜய் மலையாளியாக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் கேரக்டரின் பெயர் ஜோசப் குருவில்லா என்பது டிரைலரிலேயே உறுதியாகிவிட்டது. இந்த பெயரை பெரும்பாலும் மலையாளிகள்தான் வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிரபல மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம் உள்பட சுமார் 200 மலையாள துணை நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்களாம்.
மேலும் இந்த படத்தின் பல காட்சிகளில் மலையாள வசனங்களும் இடம்பெற்றுள்ளதாம். அட்லி எழுதிய தமிழ் வசனங்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த படமே கிட்டத்தட்ட 40% கேரளாவில்தான் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு இணையாக கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் மலையாள வசனங்கள் இடம் பெறும் காட்சிகளில் கேரள திரையரங்கள் ‘தெறி’க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.