விஜய்சேதுபதிக்கு காயம். படப்பிடிப்பு ரத்து

விஜய்சேதுபதிக்கு காயம். படப்பிடிப்பு ரத்து
dharmadurai
தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயகக்த்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடித்து வரும் ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி இந்த படத்திற்காக தேனியில் படமாக்கப்பட்டது.

தமன்னாவை துரத்தி வரும் ரவுடிகளுடன் விஜய்சேதுபதி சண்டை போடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது, ஸ்டண்ட் நடிகர் ஒருவர் விஜய்சேதுபதியின் முகத்தில் விட்ட குத்து எதிர்பாராதவிதமாக கண்ணில் பட்டதால் அவருடைய கண் திடீரென வீங்கியது.

இதன்பின்னர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய்சேதுபதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் ‘தர்மதுரை’ படத்தின் ஒருநாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வீங்கிய கண்களுடன் மறுநாளே விஜய்சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply