விஜயகாந்த் கூறிய வித்தியாசமான கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளும், அகில இந்திய அளவில் இருக்கும் தனியார் நிறுவனங்களும் எடுத்துள்ள கருத்துக்கணிப்புகளில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதனையடுத்து திமுக பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறிவருகிறது. ஆனால் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் மக்கள் நலக்கூட்டணியை கண்டுகொள்ளவே இல்லை. அந்த அணிக்கு பத்து தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணிக்கு 120 முதல் 150 இடங்கள் வரை கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளி வந்து கொண்டிருப்பதாக பேசியதை கேட்டு சமூக இணையதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் நீங்கள் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காகப் போடுவீர்கள் என பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில், ‘ஒரு எம்.எல்.ஏ. முதல் கையெழுத்து எதற்குப் போடுவாரோ அதற்காகத்தான் போடுவேன்’ என்று அறிவுபூர்வமாக கூறிய பதிலும் டுவிட்டரில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் தங்கள் சொத்துக்கணக்கை காட்டத் தயாரா? என்று மேடைதோறும் கேள்வி கேடும் விஜயகாந்த், முதலில் தன்னுடைய, தன்னுடைய குடும்பத்தினர்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்றும் டுவிட்டர்வாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.