அதானி குழுவினர்களை அடித்து விரட்டிய கிராம மக்கள். பெரும் பரபரப்பு

அதானி குழுவினர்களை அடித்து விரட்டிய கிராம மக்கள். பெரும் பரபரப்பு
adani
குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் ஊரணியை சமப்படுத்திய அதானி குழுவினர்களை கிராம மக்கள் விரட்டியடித்ததால் ராமநாதபுர மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

சமீபத்தில் தமிழக அரசு, அதானி குழுவினர்களுடன் சூரிய மின்சாரம் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்து சில மாதங்களாக இந்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அதானி குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்காக அதானி குழுமத்தினர் விளைநிலங்களை மோசடியாக பதிவு செய்து அபகரிப்பதாகவும், இறந்தவர்கள் பெயர்களிலும், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகவும் காட்டி விவசாய நிலங்களை மோசடியாக பதிவு செய்வதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றசாட்டுக்கள் எழுந்தன

கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கப்படை, தாதாகுளம், கீழமுடி மன்னார்கோட்டை, புதுக்கோட்டை போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், பஞ்சமி நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், நீர்வரத்து வாய்க்காள்கள் என சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை அதானி குழுமத்தினர் சுற்றி வளைத்திருப்பதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செந்தனேந்தல் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் செட்டி ஊரணி, பேய் ஊரணி ஆகியவற்றை நேற்று மாலை அதானி குழும வேலையாட்கள் ஆக்கிரமித்து புல்டோசர் மூலம் சம படுத்த துவங்கியுள்ளனர். இதில் ஒரு ஊரணியில் முக்கால் பகுதி சமபடுத்தப்பட்ட நிலையில், அந்த கிராம மக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்கு திரண்ட கிராம மக்கள் அதானி குழும ஆட்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊரணிக்கு சென்றனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்களை அடித்து உதைத்து அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

இதனால் அந்த கிராம பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

Leave a Reply