விஜயகாந்தை டெபாசிட் இழக்க செய்தவருக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்த ஜெயலலிதா
தேமுதிக தலைவரும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் பறிகொடுத்தார். இவருடைய தோல்விக்கு இந்த தொகுதியில் கடுமையாக தேர்தல் பணி செய்த அதிமுக வேட்பாளர் குமரகுரு வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் அதிமுகவை பகைத்து கொண்ட விஜயகாந்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று ஜெயலலிதா முடிவு செய்து தீவிரமாக வேலை பார்த்தார். அதிமுக தொண்டர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பல்வேறு முறைகளை கையாண்டு விஜயகாந்தை தோற்கடித்தனர்.
இந்நிலையில் விஜயகாந்தை தோல்வியடைய செய்த குமரகுருவுக்கு தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி தேடி வந்துள்ளது. மேலும் 2006ம் ஆண்டில் மாவட்ட செயலாளராக பதவி வகித்த அனுபவம் உள்ளதால் குமரகுரு தலைமையில் வரும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தாலே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கமுடியும் என்ற தலைமையில் கணிப்பே அவருக்கு இப்பதவியை வழங்கியது. இதுவரை விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த கதிர் தண்டபாணியின் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.