இனிமேல் யாருக்கும் தொல்லையில்லை: மகள்கள், மனைவியுடன் தற்கொலை செய்தவரின் அதிர்ச்சி வீடியோ
இனிமேல் எங்களால் யாருக்கும் தொல்லை இருக்காது என்று உருக வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மூன்று மகள்கள் மட்டும் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டவரின் வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர் நேற்று, மூன்று மகள்கள் மற்றும் மனைவியுடன் சயனைடு கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் அவர் ஒரு வீடியோவை தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என்னால் இனிமேல் யாருக்கும் தொல்லை இருக்காது. தயவுசெய்து லாட்டரி சீட்டை விழுப்புரத்தில் ஒழித்து விடுங்கள். அப்போதுதான் என்னைப்போல் ஒரு சிலர் இந்த முடிவை எடுக்காமல் இருப்பார்கள்.
எனக்கு யாரும் உதவி செய்யவில்லை உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. என்னுடைய மூன்று மகள்களும் என் கண் முன்னே இறந்து விட்டனர். இப்போது நானும் என் மனைவியும் சயனைடு கொடுத்து தற்கொலை செய்யப் போகிறோம்’ என்று உருக்கமாக அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது