கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 42 வயதாகும் காம்ப்ளி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருதயக் கோளாறுக்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு நன்றாகவே இருந்த அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓய்வுக்குப் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சச்சின் டெண்டுல்கரின் மிக நெருங்கிய தோழர் இவர்.