இயல்பு நிலை திரும்பாத காஷ்மீர். 10 நாட்களாக தொடரும் ஊரடங்கு உத்தரவு

இயல்பு நிலை திரும்பாத காஷ்மீர். 10 நாட்களாக தொடரும் ஊரடங்கு உத்தரவு

kashmirகாஷ்மீரில் இஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து இயல்பு நிலை பாதித்துள்ளது. இதுவரை 41 பேர் கலவரத்தில் பலியாகியுள்ள நிலையில் காஷ்மீரில் இன்னும் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

நோயாளிகளுக்கும், விமான நிலையங்களுக்கு செல்பவர்களுக்கும் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி யாரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைதான் உள்ளது. பத்திரிகைகள் மற்றும் இண்டர்நெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கேபிள் தொலைக்காட்சி சேவை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் இரண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் சேனல்களுக்கு தடைவிதிக்கபப்ட்டுள்ள்து. பிஎஸ்என்எல் போஸ்ட் பெய்ட் சேவை தவிர மற்ற அனைத்து மொபைல் சேவைகளும் செயல்பாட்டில் இல்லை.

நேர்முகத்தேர்வுகள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் சயத் அலி கிலானி, மிர்வெய்ஸ் உமர் பரூக், முகமது யாசின் மாலிக், ஷபீர் அகமது ஷா உட்பட பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீரில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கூடுதலாக 20 கம்பெனி (2000 பேர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையை மத்திய அரசு அனுப்பி உள்ளது

Leave a Reply