பஞ்சாபில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த இரண்டு தரப்பினர் வாள், கத்தி, ஈட்டியுடன் பயங்கரமாக மோதிய சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த மோதலில் சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோயிலில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ராணுவ நடவடிக்கை எடுத்த 30வது ஆண்டு நினைவு தினம் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த அனுசரிப்பின்போது பொற்கோவிலை நிர்வகித்துவரும் இரண்டு வெவ்வேறு பிரிவினர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காலிஸ்தானுக்கு ஆதரவான குழுவை சேர்ந்தவர்கள், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களை உள்ளே விடாமல் தகராறு செய்ய முயன்றதையடுத்து இந்த பயங்கர மோதல் வெடித்ததாக முதல்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.
இரண்டு தரப்பினர்களும், வாள், கத்தி, ஈட்டி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதிக் கொண்டதால் அந்த இடமே பெரும் போர்க்களம் போல் காட்சியளித்தது.. இந்த மோதல் நடைபெற்றபோது அங்கு போலீஸார் யாரும் இல்லை. இதனால் மோதலை கட்டுப்படுத்த முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. இந்த மோதலை படம்பிடிக்க வந்த பத்திரிகை போட்டோகிராபர்களும் தாக்கப்பட்டனர்..
தற்போது பொற்கோவிலில் போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பொற்கோவிலில் வன்முறை வெடித்துள்ளதால் பஞ்சாப் அரசும், மத்திய அரசும் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1i82FhO” standard=”http://www.youtube.com/v/dT1Ro3efNdQ?fs=1″ vars=”ytid=dT1Ro3efNdQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3454″ /]