‘விஐபி 2’ திரைவிமர்சனம்:

‘விஐபி 2’ திரைவிமர்சனம்:

ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு போர் அடிக்கின்றதோ அந்த அளவுக்கு அனிருத் இல்லாத ‘விஐபி 2’ உள்ளது.

விஐபி முதல் பாகத்தின் கதை, நடிப்பு, இயக்கம் அனைத்தையும் தாண்டி படத்தை தூக்கி நிறுத்தியது அனிருத்தின் இசை என்பதை தனுஷை தவிர அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ‘விஐபி 2’ படம் அனிருத் மிஸ் ஆனதை வெளிப்படையாக உணர முடிகிறது.

முதல் பாகத்தில் காதலித்து கொண்டிருந்த தனுஷ்-அமலாபால் இந்த படத்தில் கணவன் – மனைவியாக வருகின்றனர். முதல் பாதியின் பெரும்பகுதி இவர்களின் காதல், ஊடல், கூடல் ஆகியவை ஆக்கிரமித்து கொள்கிறது.

இந்த சமயத்தில் கட்டிட தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த பொறியாளர் விருதை தவிர மற்ற அனைத்து விருதுகளையும் கஜோலின் நிறுவனம் வாங்கி குவிக்கின்றது. சிறந்த பொறியாளர் விருது மட்டும் தனுஷூக்கு செல்கிறது. எனவே தனுஷையும் தன்னுடைய நிறுவனத்தில் இணைத்துவிட வேண்டும் என்று கஜோல் தீர்மானிக்கின்றார். ஆனால் தனுஷ் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்.

இதனால் கஜோல் ஆத்திரமடைந்து தனுஷ் பணிபுரியும் நிறுவனத்திற்கு இடைஞ்சல் கொடுப்பதோடு, அவருடைய தலைமை அதிகாரியையும் அழைத்து எச்சரிக்கின்றார். இந்த நிலையில் தன்னால் தனது நிறுவனத்திற்கு சிக்கல் வர வேண்டாம் என்று முடிவு செய்த தனுஷ், வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வேலையில்லா பட்டதாரி ஆகிறார்

இந்த நிலையில் தன்னுடிய தனது கம்பெனியில் சேரும்படி தனுஷிடம் கஜோல் சொல்ல, கஜோலின் கம்பெனியில் சேர மறுக்கும் தனுஷ் தனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளத்துடனே தான் இருக்க விரும்புகிறேன். இனிமேல் தன்னை கஜோலால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

இதன் பின்னர் தனுஷ்-கஜோல் ஆடுபுலி ஆட்டம் தொடங்குகிறது. கஜோல் கொடுக்கும் இடைஞ்சல்களை தனுஷ் வெற்றிகரமாக எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் மீதி படம்

தனுஷின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். ஏற்கனவே ரகுவரன் கேரக்டர் அவருக்கு அத்துபிடி என்பதால் மிக எளிதாக ஊதித்தள்ளுகிறார்.

முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் அமலாபாலின் நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது. குடும்பத்தை திறம்பட நடத்த வேண்டிய பொறுப்பு, தனுஷிடம் சண்டை போடுவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார்.

சமுத்திரக்கனி, ரிஷிகபூர் நடிப்பு ஓகே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பக்கம் பக்கமாக வசனம் பேசும் ரைசாவுக்கு இந்த படத்தில் ‘எஸ் மேடம்’ ‘நோ மேடம்’ ஆகியவைதான் மொத்த வசனமே படத்தின் மிகப்பெரிய மைனஸ் செளந்தர்யாவின் திரைக்கதை. அடுத்து என்ன வரும் என்பதை எளிதில் ஊகிக்கும் வகையில் திரைக்கதை இருந்தது. மேலும் கஜோல் கேரக்டருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.

படத்தின் இன்னொரு மிகப்பெரிய மைனஸ் இசை. அனிருத்தின் இசைக்கும், ஷான் ரோல்டனின் இசைக்கும் மிகப்பெரிய வித்தியாசம். பாடல்களும் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே.

மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும் படமாக உள்ளது இந்த விஐபி 2

Leave a Reply